2026 October 18, Sunday ⛅ கொழும்பு 26° ⛈️ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

அவுஸ்திரேலியாவில் இலவசப் போக்குவரத்து திட்டம்

உலகம்March 29, 2026 · 7 months முன்5
அவுஸ்திரேலியாவில் இலவசப் போக்குவரத்து திட்டம்

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வு மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா மாநிலங்கள் பொதுப் போக்குவரத்தை தற்காலிகமாக இலவசமாக வழங்கத் தீர்மானித்துள்ளன.

மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது:

விக்டோரியா மாநிலத்தில் மார்ச் மாத இறுதி வரை பேருந்து, தொடரூந்து மற்றும் டிராம் உள்ளிட்ட அனைத்து பொதுப் போக்குவரத்திலும் கட்டணம் அறவிடப்படமாட்டாது.

அதேபோல் டாஸ்மேனியா மாநிலத்தில் (Tasmania) மார்ச் 30ஆம் திகதி முதல் ஜூலை 1ஆம் திகதி வரை பேருந்து மற்றும் படகு சேவைகள் இலவசமாக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.