2026 October 18, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாளை ஜேர்மன் பயணம்

உள்ளூர்February 25, 2026 · 8 months முன்23
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாளை ஜேர்மன் பயணம்

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், நாளை (26) ஜேர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

அமைச்சர் நாளை மற்றும் நாளை மறுதினம் (27) ஆகிய இரு தினங்கள் இந்த விஜயத்தில் ஈடுபடவுள்ளார்.

ஜேர்மனியின் ஆசிய-பசுபிக் வர்த்தகச் சங்கத்தின் (OAV) பிரேமன் கிளையினால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கேற்ப, வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான தொடர்ச்சியான சந்திப்புகளில் பங்கேற்பதற்காக அமைச்சர் இந்த விஜயத்தை மேற்கொள்கிறார் என்று வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய-பசுபிக் வர்த்தகச் சங்கத்தின் (OAV) பிரேமன் கிளையின் 125ஆவது ஆண்டு நிறைவு விழாவில், ஆசியாவின் கௌரவ அதிதியாகவும் முக்கிய பேச்சாளராகவும் அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்கவுள்ளார். ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜோஹன் வேட்ஃபுல் (Dr Johann Wadephul), ஜேர்மனியின் கௌரவ அதிதியாகவும் முக்கிய பேச்சாளராகவும் இதில் கலந்துகொள்ளவுள்ளார்.

ஜேர்மனிக்கும் ஆசியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான ஜேர்மனியின் மிகப்பெரிய சங்கம் OAV ஆகும். இது ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் கவனம் செலுத்தும் ஜேர்மன் வணிகத் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை ஒன்றிணைக்கும் முதன்மையான தளமாகும்.

இந்த விஜயத்தின் போது, அமைச்சர் விஜித ஹேரத் அவர்கள் ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜோஹன் வேட்ஃபுல் அவர்களைச் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதுடன், இலங்கை தொடர்பான வணிக வட்டமேசை மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார்.