2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

வரி வருமானத்தை அதிகரிக்க மதுவரித் திணைக்கள செயற்பாட்டுக் குழு ஆலோசனை

உள்ளூர்February 14, 2026 · 6 months முன்2
வரி வருமானத்தை அதிகரிக்க மதுவரித் திணைக்கள செயற்பாட்டுக் குழு ஆலோசனை

நேற்று முற்பகல் மதுவரித் திணைக்களத்தின் வரி வருமானத்தை அதிகரித்தல் மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகளுக்கான செயற்பாட்டுக் குழுவின் கூட்டம் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, மதுவரித் திணைக்களத்தின் செயல்பாடுகளை மிகவும் வெளிப்படைத்தன்மையுடனும் செயற்திறனாகவும் முன்னெடுப்பதற்காக இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவுசெய்ய உத்தேசிக்கப்பட்ட மதுவரி வருமான முகாமைத்துவக் கட்டமைப்பின் முன்னேற்றம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

தற்போதைய அரசாங்கத்தின் அரச நிறுவன நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் மற்றும் மறுசீரமைப்புகளுக்கு உயர் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக பிரதி அமைச்சர் இங்கு தெரிவித்தார். மதுவரித் திணைக்களத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து அதிகாரிகளும் இதற்கு முழு ஆதரவைத் தெரிவித்தனர்.

மேலும், மதுவரித் திணைக்களம் கடந்த 2025 ஆம் ஆண்டில் அடையப்பட்ட நிதி செயற்பாடுகளுக்காக பிரதி அமைச்சர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பாராட்டியதுடன், இந்த ஆண்டு மேலும் உயர் நிதி முன்னேற்றத்தை அடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மதுவரித் திணைக்கள அதிகாரிகள் உறுதியளித்தனர்.

தற்போதைய சமூக மற்றும் தொழில்நுட்ப போக்குகளுக்கு ஏற்ப மதுவரிக் கட்டளைச் சட்டத்தை திருத்தும் பணிகளை விரைவுபடுத்தவும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் திருத்தங்களை நிறைவு செய்து சட்டவரைஞருக்கு அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

மதுவரித் திணைக்களத்தின் செயல்திறனை அதிகரிக்க புதிய சேவை யாப்பின் அவசியத்தை குழு வலியுறுத்தியதுடன் இதற்கு மேலதிகமாக அதிகாரிகளின் பதவி உயர்வுகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவை வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், நாட்டில் சட்டவிரோத மது வர்த்தகம் தொடர்பான குற்றங்களைத் தடுப்பதில் பொதுமக்களின் ஆதரவைப் பெற, எந்தவொரு பகுதியிலும் நிகழும் மது மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் குறித்த தகவல்களை 1913 என்ற அவசர இலக்கத்தின் மூலம் மதுவரித் திணைக்களத்திற்கு தெரிவிக்குமாறு மதுவரித் திணைக்களத்தின் வரி வருமானத்தை அதிகரித்தல்.