2026 October 14, Wednesday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மார்ச் மாதத்தில் அதிகரித்த வெளிநாட்டு தொழிலாளர் பணவனுப்பல்

உள்ளூர்April 11, 2026 · 6 months முன்4
மார்ச் மாதத்தில் அதிகரித்த வெளிநாட்டு தொழிலாளர் பணவனுப்பல்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, 2026 மார்ச் மாதத்தில் இலங்கை 814.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை தொழிலாளர் பணவனுப்பலாகப் பெற்றுள்ளது. 

மத்திய வங்கியின் அறிக்கையின்படி, 2025 மார்ச் மாதத்தில் நாட்டுக்குக் கிடைத்த வெளிநாட்டுப் பணவனுப்பல் 693.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது. 

அதற்கமைய, 2026 மார்ச் மாதத்திலான பணவனுப்பல் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 121.5 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது. 

இதேவேளை, 2026 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்களால் நாட்டுக்கு அனுப்பப்பட்ட மொத்தப் பணவனுப்பல் 2.29 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 26.5 சதவீத அதிகரிப்பு என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.