2026 October 14, Wednesday ⛅ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 25° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

எல் நினோ தாக்கம்: நீர் விநியோகத்திற்கு புதிய ஏற்பாடு!

உள்ளூர்August 20, 2026 · 2 months முன்8
எல் நினோ தாக்கம்: நீர் விநியோகத்திற்கு புதிய ஏற்பாடு!

எல் நினோ நிலைமையின் காரணமாக எதிர்காலத்தில் வறட்சி ஏற்பட்டால், நீர் விநியோகத்திற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார். 

இந்தச் சுற்றறிக்கை ஒகஸ்ட் 6 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

எல் நினோ நிலைமையால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு இன்று (20) அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், வறட்சியால் பாதிக்கப்படும் பிரதேசங்களுக்கு நீர் வசதிகளை வழங்குவதற்கு மிகவும் இலகுவான மற்றும் துரிதமான தலையீட்டை மேற்கொள்ளக்கூடிய வகையில் தேவையான சட்ட விதிமுறைகள் இந்தச் சுற்றறிக்கையின் ஊடாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.