2026 October 11, Sunday ⛅ கண்டி 22°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நிலநடுக்கத்தால் சிதைந்த கொலம்பியா – தொடரும் மீட்புப் பணிகள்!

உள்ளூர்August 12, 2026 · 2 months முன்5
நிலநடுக்கத்தால் சிதைந்த கொலம்பியா – தொடரும் மீட்புப் பணிகள்!

கொலம்பியாவில் பதிவான நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பேரழிவுக்கு இலங்கை அரசாங்கம் கவலை வௌியிட்டுள்ளது. 

இது தொடர்பில் இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தமது எக்ஸ் கணக்கில் வௌியிட்டுள்ள பதிவில், கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பேரழிவு, மற்றும் அதன் விளைவாக நிகழ்ந்த துயரமான உயிரிழப்புகள், பரவலான அழிவுகள் குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தமடைவதாக தெரிவித்துள்ளார். 

அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

இந்தத் துயரமான சந்தர்ப்பத்தில் கொலம்பிய மக்களுடனும், அந்த நாட்டு அரசாங்கத்துடனும் இலங்கை துணைநிற்கும் எனவும் வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார். 

கொலம்பியாவின் மேற்குப் பகுதியைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்துள்ளது. 

நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.