2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

டொனால்ட் டிரம்பிற்கு சமாதான விருது

உலகம்December 6, 2025 · 8 months முன்0
டொனால்ட் டிரம்பிற்கு சமாதான விருது

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’ வழங்கப்பட்டுள்ளது.

2026 குஐகுயு உலகக் கிண்ணப் போட்டிக்கான குழுக்களைத் தெரிவு செய்யும் குலுக்கல் (draw) அமெரிக்காவின் வொஷிங்டனில் (இலங்கை நேரப்படி இன்று அதிகாலை) நடைபெற்ற போதே, இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது.

FIFA தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவினால் இவ்வருடம் முதன்முறையாக இவ்விருது அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அதற்கமைய அவ்விருதின் முதலாவது வெற்றியாளராக டிரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சமாதானத்திற்காக விசேட மற்றும் அசாதாரண நடவடிக்கைகளை மேற்கொண்ட மற்றும் ‘உலகெங்கிலும் உள்ள மக்களை ஒன்றிணைத்த’ ஒருவருக்கே இவ்விருது வழங்கப்படுகின்றது.