2026 October 18, Sunday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 25° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மருத்துவர்களுக்கும் சனிக்கிழமை விடுமுறை ?

உள்ளூர்March 26, 2026 · 7 months முன்4
மருத்துவர்களுக்கும் சனிக்கிழமை விடுமுறை ?

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாக சுகாதாரத் துறையினர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், சனிக்கிழமைகளை மருத்துவர்களுக்கான உத்தியோகபூர்வ விடுமுறை தினமாக அறிவிக்குமாறு மருத்துவ நிபுணர்கள் சங்கம் (AMS) அரசாங்கத்திடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வரும் முக்கிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

தற்போதைய சூழலில் சுகாதாரச் சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்கு, வாராந்த வேலை நாட்களை மீளமைத்து, சனிக்கிழமையை விடுமுறை தினமாக அறிவிப்பது அவசியமாகும்.

ஏனைய அரச துறை ஊழியர்களுக்கு எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்ற போதிலும், மருத்துவ நிபுணர்களுக்கு போக்குவரத்துச் செலவுகளுக்காகப் போதுமான இழப்பீடுகள் வழங்கப்படுவதில்லை என மருத்துவ நிபுணர்கள் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.