2026 August 24, Monday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 35°
LIVE
அசிதவின் நெற்றியில் உரசிய ஜெய்ஸ்வாலின் தலைக்கவசம்!வட, தென் அமெரிக்காவில் தெளிவாகத் தெரியும் சந்திர கிரகணம்!குடிநீர் நெருக்கடி குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவிப்பு!பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை!பல பகுதிகளுக்கு பலத்த காற்று எச்சரிக்கை!மாற்றுத்திறனாளி மாணவர்களின் சாதனை பெருமையளிக்கிறது – பிரதமர்!தலதா மாளிகையில் பெரஹரா திருவிழா களைகட்டியது!இந்திய கடற்படை – கடலோர காவல்படை கூட்டுத் தேடுதல்!

குடிநீர் நெருக்கடி குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவிப்பு!

உள்ளூர்August 24, 2026 · 2 hours முன்8
குடிநீர் நெருக்கடி குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, தற்போது 81,000க்கும் அதிகமான மக்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நீர் தாங்கிகள் (Bowsers) மூலம் நீர் விநியோகிக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த வறட்சியான காலநிலையினால் மொனராகலை மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த மாவட்டத்தில் 33,023 பேர் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 28,523 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 8,783 பேரும் மற்றும் பதுளை மாவட்டத்தில் 7,876 பேர் உட்பட மொத்தம் 81,865 பேர் இந்த குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.