2026 August 15, Saturday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

அதிவேக வீதிகளின் வருமானம் மற்றும் பராமரிப்புச் செலவு விபரங்கள் வெளியீடு!

உள்ளூர்May 20, 2026 · 3 months முன்3

இலங்கையிலுள்ள அனைத்து அதிவேக வீதிகளினதும் 312.57 கிலோமீற்றர் தூரத்திற்கான வருடாந்த பராமரிப்புச் செலவு 5,180.90 மில்லியன் ரூபாய் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

 பாராளுமன்றத்தில் இன்று (20) பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைத் குறிப்பிட்டார்.

 அதற்கமைய, அதிவேக நெடுஞ்சாலைகளின் பராமரிப்புச் செலவு விபரங்கள் பின்வருமாறு:

 E1 –  தெற்கு அதிவேக வீதி: கொட்டாவையிலிருந்து மத்தல வரையிலான 200.45 கிலோமீற்றருக்கான மொத்தச் செலவு – 2,024.5 மில்லியன் ரூபாய்.

 E2 – வெளிவட்ட வீதி: கொட்டாவையிலிருந்து  கெரவலபிட்டிய  வரையிலான 28.86 கிலோமீற்றருக்கான செலவு – 767.6 மில்லியன் ரூபாய்.

 E3 – கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி : பேலியகொடவிலிருந்து சீதுவை வரையிலான 25.8 கிலோமீற்றருக்கான செலவு – 834.1 மில்லியன் ரூபாய்.

 E4 – மத்திய அதிவேக வீதி: மீரிகமயிலிருந்து குருநாகல் யக்கபிட்டிய வரையிலான 40.91 கிலோமீற்றருக்கான செலவு – 531.00 மில்லியன் ரூபாய்.

 E5 – தெற்கு அதிவேக வீதி நீடிப்பு: அந்தரவெவவிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான 16.55 கிலோமீற்றருக்கான செலவு – 1,022.70 மில்லியன் ரூபாய்.

 இதேவேளை, 2025 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் 2025 டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அனைத்து அதிவேக வீதிகளிலிருந்தும் கிடைத்த மொத்த வருமானம் 16,330.14 மில்லியன் ரூபாய் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

அதன்படி, வருமான விபரங்கள் பின்வருமாறு:

 தெற்கு அதிவேக வீதி வருமானம்: 5,031.28 மில்லியன் ரூபாய்.

 வெளிவட்ட வீதி வருமானம்: 4,347.32 மில்லியன் ரூபாய்.

 கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி வருமானம்: 3,355.12 மில்லியன் ரூபாய்.

 தெற்கு அதிவேக வீதி நீடிப்பு வருமானம்: 2,019.45… மில்லியன் ரூபாய்.

 மத்திய அதிவேக வீதி வருமானம்: 1,576.97 மில்லியன் ரூபாய்.