2026 November 2, Monday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் மாற்றம்!

உள்ளூர்February 9, 2026 · 9 months முன்3
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் மாற்றம்!

இலங்கை மத்திய வங்கி வைத்திருக்கும் அதிகாரப்பூர்வ கையிருப்பு சொத்துக்களின் மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஜனவரி 2026இல் 14 மில்லியன் அமெரிக்க டொலர்களால் சிறிதளவு சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 0.2 சதவீதம் சிறிதளவு குறைவு எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 2025 இறுதியில் மத்திய வங்கி வைத்திருக்கும் அதிகாரப்பூர்வ கையிருப்பு சொத்துக்களின் மதிப்பு 6,838 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்துள்ளது,

இது ஜனவரி 2026 இல் 6,824 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளதுடன்,அந்நிய செலாவணி கையிருப்பும், ஜனவரி 2026 இல் குறைந்துள்ளது.