2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

லெபனான் மீதான தரைவழித் தாக்குதல் : கனடா எச்சரிக்கை

உலகம்March 25, 2026 · 5 months முன்1
லெபனான் மீதான தரைவழித் தாக்குதல் : கனடா எச்சரிக்கை

லெபனானைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டங்களை கனடா “கடுமையாகக் கண்டிப்பதாக” AFP செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் பாரிய தரைவழி ஆக்கிரமிப்பை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள நிலையில், லெபனானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு “மீறப்படக்கூடாது” என்று கனடா எச்சரித்துள்ளது.

லெபனானின் தெற்கு எல்லையில் 30 கிலோமீட்டர் (18.6 மைல்) வரையிலான பகுதியை ஆக்கிரமித்து ஆளுவதற்கு இஸ்ரேல் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மார்ச் மாத ஆரம்பத்திலிருந்து இஸ்ரேலியத் தாக்குதல்களால் லெபனானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 1,072 ஆக உயர்ந்துள்ளதுடன், சுமார் 3,000 பேர் காயமடைந்துள்ளனர்.