2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சர்வதேச சந்தையில் தேயிலைக்கு அதிகரித்த கேள்வி ?

உள்ளூர்March 25, 2026 · 5 months முன்3
சர்வதேச சந்தையில் தேயிலைக்கு அதிகரித்த கேள்வி  ?

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும் இலங்கைத் தேயிலைக்கான (Ceylon Tea) கேள்வி சர்வதேச சந்தையில் கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கைத் தேயிலை சபை தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழலால், அங்கிருக்கும் மக்கள் உணவுப் பொருட்களைச் சேமிக்கத் தொடங்கியுள்ளனர். இது தேயிலைக்கான கேள்வியை அதிகரிக்கச் செய்துள்ளதாக தேயிலை சபையின் தலைவர் ராஜ் ஒபேசேகர தெரிவித்தார்.

கடந்த வார ஏலத்தில் ஒரு கிலோ தேயிலையின் சராசரி விற்பனை விலை 1,153 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

ஆரம்பத்தில் தேயிலை விலையில் சிறிய வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும், தற்போது விலையும் தேயிலைக்கான கேள்வியும் ஸ்திரமான நிலையை எட்டியுள்ளன. தற்போது ஏலத்தில் விற்பனையாகாத தேயிலையின் அளவு 8% முதல் 10% வரை மாத்திரமே காணப்படுகிறது.

ஹார்முஸ் நீரிணைப்பு (Strait of Hormuz) மூடப்பட்டமை மற்றும் பிராந்திய மோதல்கள் காரணமாக குவைத், சவுதி அரேபியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கான ஏற்றுமதி பாதிக்கப்பட்டது.

எனினும் ,தேயிலை உற்பத்தியைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக அரசாங்கம் சில முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது.