2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கிங் ஓயாவில் குதித்து காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு : காதலன் வைத்தியசாலையில்

உள்ளூர்December 30, 2025 · 8 months முன்2
கிங் ஓயாவில் குதித்து காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு : காதலன் வைத்தியசாலையில்

கிங் ஓயாவில் குதித்து காணாமல்போன பாடசாலை மாணவி நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் ஜா – எல போபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஆவார்.

இது தொடர்பில் குறித்த மாணவி கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது 18 வயதுடைய காதலனுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து வென்னப்புவை பிரதேசத்திற்கு வரழைத்து காதலன் கண் முன்பு கிங் ஓயாவில் குதித்துள்ளார்.

மாணவியை காப்பாற்ற முயன்று காதலனும் கிங் ஓயாவில் குதித்துள்ள நிலையில், பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் மாணவி நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளார்.காணாம்போன மாணவி நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மாணவியின் குடும்பத்தில் தனிப்பட்ட பிரச்சினைகள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.