Search

Sep 8, 2025

பல்சுவை

சூப்பர் ஸ்டார் - உலக நாயகன் கூட்டணி உறுதி.

தென்னிந்திய தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் மற்றும் உலக நாயகன் கமல் ஹாசன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இத் திரைப்படத்தை கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், மாஸ் கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்டு இத் திரைப்படம் அமையும் எனவும் தகவல்கள் பரவி வருகின்றது.

இந் நிலையில், அண்மையில் நடைபெற்ற விருது நிகழ்வொன்றில் கலந்து கொண்ட கமல் ஹாசன் இதனை உறுதி செய்துள்ளார்.

"நாங்கள் இருவரும் இனைந்து முன்னரே நடித்திருக்க வேண்டும். ஆனால் தற்போது அதற்கான சூழ்நிலை மற்றும் வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளது" என உலக நாயகன் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

எனவே இத் திரைப்படத்திற்கான உத்தியோகபூர்வமான அறிவிப்புக்களுக்கான எதிர்பார்ப்புக்கள் உலக ரசிகர்களிடையே உயர்ந்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All