Search

Rebecca

Nov 5, 2025

பல்சுவை

மீண்டும் இணையும் சுந்தர்.சி மற்றும் விஷால்

நயன்தாரா நடித்து வரும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தினை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. இதன் படப்பிடிப்பு இறுதிகட்ட நிலையில் இள்ளது. இதனை முடித்துவிட்டு விஷால் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார்.

‘மதகஜராஜா’ வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது. சுந்தர்.சி. இயக்கத்தில் ஆம்பள, மத கஜ ராஜா ஆக்‌ஷன் படங்களில் விஷால் நடித்துள்ளார்.

இந்நிலையில், சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் விஷால் நடிப்பதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதில், தமன்னா மற்றும் கயாடு லோகர் கதாநாயகிகளாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் தெரிகிறது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All