Search

Nov 10, 2025

பல்சுவை

பைசன் படம் இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வெளிவந்த படம் பைசன் காளமாடன்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ரஜிஷா விஜயன், லால், அமீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள பைசன் படம், முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இன்றுடன் பைசன் படம் வெளிவந்து 25 நாட்கள் ஆகியுள்ளது.

இந்த நிலையில், பைசன் படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 79.9 கோடி வசூல் செய்துள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All