Rebecca
Sep 4, 2025
பல்சுவை
வசூல் மழையில் லோகா
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் லோகா.
இப்படம் சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவாகி வெளிவந்துள்ளதுடன், துல்கர் சல்மான் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து இருந்தார்.
இயக்குநர் டாம்னிக் அருண் இப்படத்தை இயக்கியிருந்த நிலையில், கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படத்திற்கு இரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்க, பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது.
இந்த நிலையில், லோகா திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, உலகளவில் இப்படம் ரூ. 101 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
முதல் முறையாக ஹீரோயின் சப்ஜெக்டில் வெளிவந்த ஒரு திரைப்படம் தென்னிந்திய அளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
https://x.com/DQsWayfarerFilm/status/1963250742183014710
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
Related News
View All