
janani
Jun 18, 2026
விளையாட்டு
உலகக் கிண்ணத்தில் ஜெர்மன் வீரர்களுக்கு விசித்திர சிக்கல்!

2026 FIFA உலகக் கிண்ணத் தொடரில் களத்தில் எதிரணிகளை எதிர்கொள்ளும் ஜெர்மனி அணி, தற்போது மைதானத்திற்கு வெளியேயும் ஒரு எதிர்பாராத சவாலை சந்தித்துள்ளது.
அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் அமைந்துள்ள ஜெர்மனி அணியின் பயிற்சி முகாமிற்கு அருகில் நச்சுத்தன்மை வாய்ந்த பாம்பு ஒன்று காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து, பயிற்சியின்போது புற்கள் மற்றும் புதர்ப்பகுதிகளில் வீரர்கள் கூடுதல் அவதானத்துடன் செயற்பட்டு வருவதாக அணித்தலைவர் ஜோசுவா கிம்மிக் தெரிவித்துள்ளார்.
காணப்பட்ட பாம்பு, அமெரிக்காவில் பரவலாகக் காணப்படும் அதிக நச்சுத்தன்மை கொண்ட ‘கொப்பர்ஹெட்’ வகையைச் சேர்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேபோன்ற அச்சம் சுவிட்சர்லாந்து மற்றும் நோர்வே அணிகளிடமிருந்தும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகக் கிண்ண வெற்றியை இலக்காகக் கொண்டு தயாராகும் வீரர்களுக்கு, தற்போது பாம்புகளின் நடமாட்டமும் கூடுதல் கவலையாக மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





