Search

janani

Jul 16, 2026

விளையாட்டு

அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

நடப்பு உலக சாம்பியனான அர்ஜென்டினா அணி, 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது!

அமெரிக்காவின் அட்லாண்டா மைதானத்தில் நேற்று (15) நடைபெற்ற விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அபார வெற்றி பெற்றது. 68,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதி கோல் இன்றி சமநிலையில் இருந்தது.

ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் அந்தோனி கோர்டன் முதல் கோலை அடித்து முன்னிலை பெற வைத்தார். இதற்குப் பதிலடியாக, 85-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் என்சோ பெர்னாண்டஸ் கோல் அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தார். தொடர்ந்து விறுவிறுப்பாக நகர்ந்த ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (92-வது நிமிடம்), லௌதாரோ மார்டினெஸ் அர்ஜென்டினாவின் வெற்றி கோலை அடித்து அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

இதுவரை மூன்று முறை உலகக் கோப்பையை வென்றுள்ள அர்ஜென்டினா, தனது ஏழாவது இறுதிப்போட்டியில் நுழைகிறது. வரும் 20-ஆம் தேதி நியூயார்க்கின் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான இறுதிப்போட்டியில், அர்ஜென்டினா - ஸ்பெயின் அணிகள் மோதவுள்ளன.

இந்தத் தொடரின் மூன்றாவது இடத்திற்கான போட்டி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே எதிர்வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All