Search

admin

Jul 7, 2026

விளையாட்டு

உலகக் கிண்ண காலிறுதிக்கு ஸ்பெயின் அதிரடி முன்னேற்றம்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கிண்ணம் 2026 (FIFA World Cup 2026) தொடரின்  Round of 16 சுற்றில், போர்த்துக்கல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி கால்இறுதிப் போட்டிக்கு அதிரடியாக முன்னேறியுள்ளது.

 

டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த முக்கியமான ஆட்டத்தில், ஆரம்பம் முதலே இரு அணிகளும் சமபலத்துடன் மோதின.

 

ஆட்டத்தின் பெரும்பகுதி ஸ்பெயின் அணியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. ஸ்பெயின் அணி வீரர்கள் தொடர்ந்து போர்த்துக்கல் கோல் போஸ்ட்டை நோக்கித் தாக்குதல் நடத்தினர்.

 

ஆட்டத்தின் 90 நிமிடங்கள் வரை இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. 

 

போட்டி சமனில் முடிந்து கூடுதல் நேரத்திற்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (90 + 1') ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரர் மைக்கேல் மெரினோ (Mikel Merino) அசாத்தியமான ஒரு கோலை அடித்து ஒட்டுமொத்த மைதானத்தையும் அதிரவைத்தார்.

 

இந்த ஒரு கோலின் மூலம் ஸ்பெயின் அணி 1-0 என வெற்றி பெற்று காலிறுதிக்கு நுழைந்தது. அதேவேளையில், இந்த அதிர்ச்சித் தோல்வியின் மூலம் போர்த்துக்கல் அணி உலகக் கிண்ணம் தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. 

 

நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கடைசி உலகக் கிண்ண போட்டியாக இது இருக்கக்கூடும் என்பதால் அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All