
admin
Jul 20, 2026
விளையாட்டு
உலகக் கோப்பை இறுதியில் மனமுடைந்த மெஸ்ஸி; ரசிகர்கள் சோகத்தில்

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற 2026 கால்பந்தாட்ட உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில், நடப்புச் செம்பியனான ஆர்ஜென்டினா அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.
போட்டியின் முடிவில் ஆர்ஜென்டினா அணி தோல்வியைத் தழுவியதும், அணியின் தலைவரும் கால்பந்து ஜாம்பவானுமான லியோனல் மெஸ்ஸி, மைதானத்தில் மனமுடைந்து கண்ணீர் விட்ட காணொளி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது வாழ்நாளின் இறுதி கால்பந்து தொடராகக் கருதப்பட்ட இதில், கிண்ணத்தை தக்க வைக்க முடியாமல் போன ஏமாற்றத்துடன் அவர் இரண்டாம் இடத்திற்கான பதக்கத்தைப் பெற்றுக் கொள்ளும்போது கண்கலங்கிய காட்சி உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் ஆர்ஜென்டினா கால்பந்து சங்கம் (AFA) தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், "உங்களது கண்ணீர் எங்களது கண்ணீர் தலைவர்! நீங்கள் எங்களுக்கு வழங்கிய மகிழ்ச்சிக்கு நன்றி" என்று உருக்கமாகத் பதிவிட்டுள்ளது
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





