
jino
Aug 1, 2026
விளையாட்டு
ஓய்வினை அறிவித்தார் நட்சத்திர வீரர் ரஹானே !

அஜிங்க்ய ரஹானே, தனது 38 வது வயதில், கடந்த 2026 ஜூலை 30 அன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இந்திய அணிக்காக சுமார் 15 ஆண்டுகள் விளையாடியுள்ள அவர், குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அமைதியான, நட்சத்திர துடுப்பாட்ட வீரராகவும் சிறந்த தலைவராகவும் விளங்கினார்.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 6 ஜூன் 1988 பிறந்தார். அஜிங்க்ய மதுகர் ரஹானே என்பது இவரது இயற்பெயராகும் .
வலது கை துடுப்பாட்ட வீராரான அஜிங்க்ய ரஹானே, 2011 - T20 போட்டிகளிலும், 2011 - ODI போட்டிகளிலும், 2013 - Test போட்டிகளிலும் அறிமுகமாகினார்.
85 Test போட்டிகளில் விளையாடியுள்ள அஜிங்க்ய ரஹானே மொத்தமாக 5,077டெஸ்ட் ஓட்டங்களை பெற்றுள்ளார். இவற்றில் 12 சதங்கள் உள்ளடங்கும்.
வெளிநாட்டு மைதானங்களில் டெஸ்ட் போட்டிகளின் இந்தியாவின் முக்கிய வெற்றிகளில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தவறாக இவர் காணப்படுகின்றார்.
குறிப்பாக 2020–21 ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணிக்கு ரஹானே கேப்டனாக பொறுப்பேற்று இந்தியாவை 2–1 என்ற கணக்கில் வரலாற்று சிறப்புமிக்க தொடர்வெற்றிக்கு வழிநடத்தினார்.
மெல்போர்ன் டெஸ்டில் அவர் அடித்த சதம் (112) இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
ஐ.பி.எல் போட்டிகளில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) விளையாடிய ரஹானே கடந்த ஆண்டு 2026 முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுவருகிறார்.
அவரது ஓய்வு அறிவிப்பைத் தொடர்ந்து ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட பல முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.-
அஜிங்க்ய ரஹானேவின் ODI மற்றும் T20I சர்வதேச சாதனைகள்
ஒருநாள் சர்வதேசம் (ODI) 90 போட்டிகளில் மொத்தமாக 2,962 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
அதிகபட்ச ஓட்டம் - 111
சதங்கள் - 3
அரைச்சதங்கள் - 24 என்பன இதில் அடங்கும்.
சர்வதேச T20 போட்டிகளில், 20 போட்டிகளில் விளையாடியுள்ள அஜிங்க்ய ரஹானே மொத்தமாக 375 ஓட்டங்கள் பெற்றுள்ளார்.
அதிகபட்ச ஓட்டம் - 61
அரைச்சதங்கள் - 1
குறிப்பிடத்தக்க ODI சாதனைகள்,
2017 வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 5 போட்டிகளில் 336 ஓட்டங்கள் குவித்து தொடர்நாயகன் (Player of the Series) விருதை வென்றார்.
அமைதியான அணுகுமுறை, அழுத்தமான சூழல்களில் பொறுப்புடன் விளையாடும் திறன்
வெளிநாட்டு மைதானங்களில் சிறந்த டெஸ்ட் சாதனைகளாக பார்க்கப்படுகின்றது.இந்தியாவின் மிகச்சிறந்த இடைக்கால டெஸ்ட் கேப்டன்களில் ஒருவர், என்ற மரியாதையுடன் ரசிகர்களால் போற்றப்பட்டுவருகின்றார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





