sasi
Dec 24, 2025
பல்சுவை
அமெரிக்க நடிகர் ஜேம்ஸ் ரான்சன் தற்கொலை
உலகின் இதுவரை உருவான சிறந்த தொலைக்காட்சி தொடர்களில் ஒன்றாக கருதப்படும் 'The Wire' ல் 'Ziggy' கதாபாத்திரத்தில் நடித்த அமெரிக்க நடிகர் ஜேம்ஸ் ரான்சன் அவரது 46 வது வயதில் காலமானார்.
கடந்த வெள்ளிக்கிழமை ரான்சன் தற்கொலை செய்த்துக்கொண்டதாக லொஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவ ஆய்வுக் கழகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக அவர் போதை பொருள்களுக்கு அடிமையாகவும் மனநல பிரச்சினைகளாலும் போராடி வந்தார்.
சிறிய வயதில் அவர் சந்தித்த பாலியல் துஷ்பிரயோகங்களே இதற்குக் காரணமாக இருந்தது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவரது மரணத்தையொட்டி ஹாலிவுட் முன்னணி கலைஞ்சர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
'Generation Kill', 'It Chapter Two', 'The Black Phone' மற்றும் 'Starlet' போன்ற திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.
போல்டிமோர் நகரத்தை மையமாகக் கொண்ட 'The Wire' தொடரின் மூலம் அவர் பெற்ற புகழ் அவரது நடிப்புப் பயணத்தில் மாறுபாட்ட இலக்கமாக அமைந்தது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All







