Search

Dec 11, 2025

பல்சுவை

கில்லி வசூலை முறியடிக்குமா ரஜினியின் படையப்பா?

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள்.

அண்மையில் புதிய திரைப்படங்களை தாண்டி ரீ-ரிலீஸ் செய்யப்படும் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அதன்படி கில்லி, பில்லா, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரீ-ரிலிஸ் ஆனது. அதிலும் கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸிலும் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் ரஜினியின் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்றான ‘படையப்பா’ திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸாக உள்ளது. 1999-ல் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி கணேசன், சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், நாசர், ராதாரவி, லெட்சுமி. ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ரஜினியின் அதிரடி நடிப்பு, ஸ்டைல் மற்றும் ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

நாளை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு திரையரங்கில் ரீ ரிலீஸ் செய்யப்படும் படையப்பா படத்தின் முன் பதிவு அமோகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த முன்பதிவில் ரூ. 85ூ இலட்சம் வசூல் வந்துள்ளது.

இதற்கு முன் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட விஜய்யின் கில்லி திரைப்படம் முதல் நாள் ரூ. 3.5 கோடி வசூல் செய்தது. அதை படையப்பா படம் முறியடிக்க அதிக வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All