
janani
May 14, 2026
உள்ளூர்
“மிஸ் கிராண்ட் ஆல் ஸ்டார்ஸ்” போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் திஷானி பெரேரா

இலங்கையைச் சேர்ந்த செல்வி திஷானி பெரேரா, தாய்லாந்தில் முதன்முறையாக நடைபெறவுள்ள “மிஸ் கிராண்ட் ஆல் ஸ்டார்ஸ்” (Miss Grand All Stars) சர்வதேச அழகிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக இன்று காலை தாய்லாந்து நோக்கிப் புறப்பட்டார்.
மிஸ் கிராண்ட், மிஸ் யுனிவர்ஸ் மற்றும் மிஸ் வேர்ல்ட் போன்ற உலகின் முன்னணி அழகிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே இந்தப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 2025 ஆம் ஆண்டுக்கான மிஸ் கிராண்ட் இலங்கை பட்டத்தை வென்ற திஷானி பெரேரா, இந்த சர்வதேச மேடையில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
உலகின் 80 நாடுகளைச் சேர்ந்த வெற்றி பெற்ற அழகிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி, தாய்லாந்தின் பாங்காக் நகரில் மே 16 முதல் மே 30 வரை நடைபெறவுள்ளது.
வணிக மேலாண்மையில் பட்டம் பெற்றுள்ள திஷானி பெரேரா, தற்போது தனது முதுகலைப் பட்டப்படிப்பையும் தொடர்ந்து வருகிறார்.
இவர் இன்று காலை 07.25 மணிக்கு SriLankan Airlines நிறுவனத்தின் UL-404 விமானம் மூலம் பாங்காக் நோக்கிப் புறப்பட்டார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





