Search

admin

May 13, 2026

உள்ளூர்

நீர்கொழும்பு களப்பில் கடற்படை அதிரடி!

நீர்கொழும்பு களப்புப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட சுமார் 941 கிலோகிராம் பீடி இலைகளுடன் இரு சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மேற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள 'இலங்கை கடற்படைக் கப்பல் கெளனி' (SLNS Kelani) நிறுவனத்தின் சிப்பாய்கள் நீர்கொழும்பு களப்பு பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த டிங்கி படகு ஒன்றினை வழிமறித்து சோதனையிட்டனர்.

குறித்த டிங்கி படகினை சோதனையிட்ட போது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 மூட்டைகளை கடற்படையினர் கண்டெடுத்தனர். அந்த மூட்டைகளை பிரித்து சோதனையிட்ட போது, அவற்றில் 941 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் கடத்தி வரப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, பீடி இலைகள் அடங்கிய மூட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிங்கி படகு மற்றும் அதிலிருந்த இரண்டு சந்தேக நபர்களையும் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

சட்டவிரோத கடத்தலின் ஊடாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட இந்த பீடி இலைகள் மற்றும் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் நீர்கொழும்பு சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

கடல் மார்க்கமாக முன்னெடுக்கப்படும் இவ்வாறான சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All