
janani
Aug 6, 2026
உள்ளூர்
பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை திகதிகள் அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுசரணை பெறும் தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் நாளை (07) உடன் நிறைவடைவதுடன், முஸ்லிம் பாடசாலைகளுக்கு செப்டம்பர் 2 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
அனைத்துப் பாடசாலைகளுக்கும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டம்பர் 7 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகி, டிசம்பர் 4 ஆம் திகதியுடன் நிறைவடையும். மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





