
janani
Aug 6, 2026
உள்ளூர்
மாத்தறை முதல் பொத்துவில் வரை மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இக்கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால், மறு அறிவித்தல் வரை மீனவர்கள் அங்கு செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மட்டக்களப்பில் இருந்து காங்கேசன்துறை, புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக மாத்தறை வரையான பிற கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் 50 - 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





