Search

janani

Aug 6, 2026

உள்ளூர்

நாட்டின் பல பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தீவிரமடைந்துள்ள பருவப்பெயர்ச்சி காரணமாக, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் 100 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

அத்துடன், வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், இடியுடன் கூடிய மழையின் போது மின்னல் தாக்கங்கள் மற்றும் காற்றுடனான ஆபத்துக்களைத் தவிர்க்க பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All