Search

janani

Apr 23, 2026

பல்சுவை

முதல் வாக்காளராக ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அஜித்

இந்தியாவின் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார் முதல் நபராக தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளார்.

திருவான்மியூரில் அமைந்துள்ள வாக்குச்சாவடிக்கு காலை 6:40 மணிக்கு வருகை தந்த நடிகர் அஜித் குமார், பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.

தமிழகத்தில் இன்று காலை வாக்குப்பதிவு ஆரம்பமான நிலையில், முதல் நபராக அவர் தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளார்.

வெள்ளை நிற உடையில் வந்திருந்த அவர், தனது விரலில் வைக்கப்பட்ட மை அடையாளத்தைக் காட்டி புகைப்படங்களுக்குத் தோற்றமளித்தார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All