Search

Feb 8, 2026

விளையாட்டு

நேபாளத்திற்கு 185 வெற்றியிலக்கு

ஐ.சி.சி இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடரின் இன்றைய (8) இரண்டாம் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் மோதுகின்றன.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இங்கிலாந்து அணி சார்பில் ஜேகொப் பெத்தெல் 55 ஓட்டங்களையும், அணித் தலைவர் ஹரி புருக் 53 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

இந்நிலையில் 185 என்ற வெற்றியிலக்கை நோக்கி நேபாளம் அணி துடுப்பாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All