2026 October 10, Saturday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மோசமான வானிலை… பரீட்சைகள் குறித்து முக்கிய முடிவு?

உள்ளூர்August 4, 2026 · 2 months முன்6
மோசமான வானிலை… பரீட்சைகள் குறித்து முக்கிய முடிவு?

நிலவும் சீற்றமான வானிலைக்கு மத்தியில், எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை என்பன தொடர்பாக நாளை (05) சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. 

வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கு இடையே குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. 

நிலவும் மழைக்கால வானிலையுடன் பரீட்சைப் பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்தார். 

“உயர்தரப் பரீட்சையுடன் அப்பகுதியில் ஏற்படும் நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக பரீட்சைத் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து 5ஆம் திகதி சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ளோம். அங்கு இதற்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது குறித்து நாங்கள் தயாராகி வருகிறோம். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஓகஸ்ட் மாதம் மழை குறைவான காலமாகும். எனினும் பருவக்காற்று தீவிரமடைந்துள்ளமையால் இது ஒரு தற்காலிக நிகழ்வாகும். அத்துடன் 6, 7 மற்றும் 8ஆம் திகதிகளுக்குப் பிறகு மழை சற்று குறையும். எப்படியும் பரீட்சை 10ஆம் திகதிக்குப் பிறகே உள்ளது என்பதால், அந்த நேரத்திற்குள் இந்தத் தாக்கம் பெருமளவில் குறைந்துவிடும்.” என்றார். 

எதிர்வரும் 6ஆம் திகதிக்குப் பிறகு பசுபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்படும் சூறாவளி நிலைமையின் தாக்கம் காரணமாக நாட்டில் மழையளவில் ஓரளவுக்கு அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என அஜித் விஜேமான்ன மேலும் தெரிவித்தார்.