2026 October 11, Sunday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல்….

உள்ளூர்April 9, 2026 · 6 months முன்5
அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல்….

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களில், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முதியோர்களுக்கான தேசிய செயலகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் கே. சதுர மிஹிதும் தெரிவிக்கையில்,

பயனாளிகள் தங்களுக்குரிய கொடுப்பனவுகளை எவ்வித சிரமமுமின்றி பெற்றுக்கொள்ளத் தேவையான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

பயனாளிகள் தத்தமது பிரதேசங்களுக்குரிய அஞ்சல் நிலையங்களுக்குச் சென்று இந்தக் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இக்கொடுப்பனவு விநியோகம் இன்று முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி வரை வழங்கப்படும்.

எதிர்வரும் காலங்களில் கொடுப்பனவு நடைமுறையில் பாரிய மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாகப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.