2026 September 24, Thursday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
நாமல் தொடர்பான 70 மில்லியன் இலஞ்ச வழக்கில் கைது22வது திருத்தத்திற்கு எதிராக மனசாட்சிப்படி வாக்களிக்குமாறு திலித் கோரிக்கைநீதித்துறையில் வெளிப்படைத்தன்மை, சுயாதீனம் குறித்து அமைச்சர்அனோஜனை காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்த வேண்டும் – ITAKசபாநாயகர் முன்னிலையில் ஹபீப் ரிஃபான் சத்தியப்பிரமாணம்உபாதையால் ஹசரங்க அணியிலிருந்து விலகல்மூன்று நாள் அமெரிக்க விஜயத்தை தொடங்கிய ஜி ஜின்பிங்அனோஜனை மீட்க அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

நாமல் தொடர்பான 70 மில்லியன் இலஞ்ச வழக்கில் கைது

உள்ளூர்September 24, 2026 · 39 seconds முன்0
நாமல் தொடர்பான 70 மில்லியன் இலஞ்ச வழக்கில் கைது

க்ரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நிறுவனத்திற்காக, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான கொழும்பு கோட்டை ‘டிரான்ஸ்வொர்க் சதுக்கம்’ (Transworks Square) நிலத்தை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கு உதவுவதற்காக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபாவை இலஞ்சமாகக் வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவர் இந்த 70 மில்லியன் ரூபாய் பணத்தை மூன்று சந்தர்ப்பங்களில் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

சந்தேகநபர் இன்று (24) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.