2026 September 13, Sunday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
22ஆவது திருத்தத்தை தோற்கடிக்க மக்கள் சக்தி திரட்டும் சஜித்!36 பிரதேச செயலகப் பிரிவுகள் வறட்சியின் பிடியில்!இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை 15 இலட்சத்தை கடந்தது!ஜாவா கடலில் மாயமான கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது!ஜாவா கடலில் மீட்பு நடவடிக்கை தீவிரம்!கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் அதிர்ச்சி சம்பவம்!புதிய பொது முகாமையாளர் நியமனம் கோரும் தொழிற்சங்கங்கள்!தாய்லாந்தில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு வாய்ப்பு விரிவாகும்!

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு : 6 பேர் கைது!

உள்ளூர்December 26, 2025 · 9 months முன்3
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு : 6 பேர் கைது!

கடந்த டிசம்பர் 22ஆம் திகதி அம்பலாங்கொடை பிரதேசத்தில் காட்சியறை முகாமையாளர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, இவர்களில் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினராலும், ஏனைய நால்வர் காலி குற்றத்தடுப்புப் பிரிவினராலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு ரிவோல்வர் ஆகிய துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.