2026 September 6, Sunday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
பயணத் தடை விதிக்கும் முன்பே வெளிநாடு சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர்!மாணவர்களின் நலனுக்காக மேலதிக பேருந்துகள் சேவையில்!7 மாவட்டங்களை வாட்டும் வறட்சி – குடிநீர் விநியோகம் தீவிரம்!NPP மக்கள் பேரணி இன்று ஆரம்பம் – சிறிகொத்தவில் UNP கொண்டாட்டம்!இருமுறை முயன்றும் வெடிக்காத து#ப்பாக்கி – கொஸ்கொடவில் பரபரப்பு!பூட்டான் பயணத்தை முடித்து இலங்கை திரும்பினார் பிரதமர் ஹரிணி!80 ஆண்டுகளைக் கடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் பயணம்!டைமண்ட் லீக் மகுடத்தை வென்ற ருமேஷ் தரங்க!

மாணவர்களின் நலனுக்காக மேலதிக பேருந்துகள் சேவையில்!

உள்ளூர்September 6, 2026 · 1 hour முன்1
மாணவர்களின் நலனுக்காக மேலதிக பேருந்துகள் சேவையில்!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை (07) ஆரம்பமாகவுள்ளது.

இதனையொட்டி, அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் (06) நாளையும் (07) டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கண்காணிக்கும் சோதனைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உப தலைவர் பிரதீப் பொரலெஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மாணவர்களின் நலன் கருதி தேவைக்கேற்ப ‘சிசு செரிய’ உட்பட மேலதிக பேருந்துகள் நாளை(7) முதல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.