2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 34° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

வெள்ளை மாளிகையில் திடீரென ஏற்பட்ட பெரும் பரபரப்பு!

உலகம்April 26, 2026 · 6 months முன்5
வெள்ளை மாளிகையில்  திடீரென ஏற்பட்ட பெரும் பரபரப்பு!

வோஷிங்டன் ஹில்டன் விருந்தகத்தில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சந்திப்பு விருந்து நிகழ்ச்சியில் திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதனையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டு, அங்கிருந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடன் பாதுகாப்புப் படையினரால் உடனடியாக வெளியேற்றப்பட்டார்.

பின்னர் அவர் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பிடிபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் ஹில்டன் விருந்தகத்தின் பிரதான மண்டபத்தில் இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.