2026 October 17, Saturday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 30° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

சொத்து, பொறுப்பு விபரங்கள் இனி ஒன்லைன் முறையில்

உள்ளூர்March 31, 2026 · 7 months முன்6
சொத்து, பொறுப்பு விபரங்கள் இனி ஒன்லைன் முறையில்

சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்க மத்திய மின்னணு கட்டமைப்பு இன்று (31) முதல் திறக்கப்படுவதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்றைய தினத்திலிருந்து சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை இந்த மத்திய மின்னணு கட்டமைப்பின் ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க வேண்டும் என அதன் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்து மேலதிக விபரங்களை வழங்கிய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க: 

“2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரகாரம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நிர்வகிக்கப்படும் மத்திய மின்னணு கட்டமைப்பை விபரங்களைச் சமர்ப்பிப்பவர்களுக்காகத் திறக்கும் நிகழ்வு, இன்று முற்பகல் 10.00 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சர்வதேச ஆய்வு மையத்தில் நடைபெறவுள்ளது. இந்த மத்திய மின்னணு கட்டமைப்புச் செயற்படத் தொடங்கிய பின்னர், சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், தமது விபரங்களை இந்தக் கட்டமைப்பின் ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க வேண்டும்.” என்றார்.