2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கமல் அமரசிங்கவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

உள்ளூர்March 30, 2026 · 5 months முன்1
கமல் அமரசிங்கவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வாகனப் பதிவு நடைமுறைகளில் முறைகேடுகள் செய்தமை மற்றும் வாகனங்களின் சேஸ் (Chassis) இலக்கங்களை மாற்றியமைத்து சட்டவிரோதப் பதிவுகளுக்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரம்பத்தில் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், இன்று குருணாகல் – பிலெஸ்ஸ (Pilessa) நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை ஏப்ரல் 10-ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.