2026 October 18, Sunday ⛅ கொழும்பு 24° 🌧️ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நீர்மட்டம் குறைந்தாலும் நீர் கட்டணத்தில் மாற்றமில்லை

உள்ளூர்March 30, 2026 · 7 months முன்4
நீர்மட்டம் குறைந்தாலும் நீர் கட்டணத்தில் மாற்றமில்லை

நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்தாலும், மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பிருந்தாலும், நீர் கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை வலியுறுத்துகிறது.

மின்சாரக் கட்டணங்களின் அதிகரிப்பு நீர் கட்டணத்தை நேரடியாகப் பாதிக்காது என்று நீர் வழங்கல் அதிகார சபையின் தலைவர் சந்தன பண்டார சுட்டிக்காட்டுகிறார்.

நீர் கட்டணத் திருத்தம் என்பது ஆண்டுக்கு இருமுறை மட்டுமே நடைபெறும் ஒரு கொள்கை என்றும், ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கட்டண மாற்றங்கள் எதுவும் செய்யப்படாது நீர் வழங்கல் அதிகார சபையின் தலைவர் கூறினார்.

அதன்படி, நீர் கட்டணங்கள் தொடர்பாக ஏதேனும் மதிப்பீடு செய்யப்பட்டால், அது ஜூன் 30-ஆம் திகதிக்குப் பின்னறே நடைபெறும் என்று கூறியுள்ளார்.