2026 October 18, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

உள்ளூர்March 29, 2026 · 7 months முன்7
இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்ட போலி இணையதளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் ‘பிஷிங்’ வகை நிதி மோசடிகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

அஞ்சல் திணைக்களத்தின் பெயரில் பொதுமக்களின் கைபேசிகளுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன.
உங்களுக்கு வந்துள்ள ஒரு பொதியைப் பெற்றுக்கொள்வதற்கு சிறிய அளவிலான கட்டணம் ஒன்றைச் செலுத்த வேண்டும் என அந்தக் குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

திணைக்களத்தின் இணையதளத்தைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு போலி இணையதள முகவரி அதில் வழங்கப்பட்டிருக்கும்.

அந்த இணைப்பை அழுத்தி உள்ளே செல்பவர்களிடம் அவர்களின் வங்கி அட்டைகளின் விபரங்கள் கோரப்படுகின்றன. அந்தத் தகவல்களைப் பதிவிட்டவுடன், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து மோசடியாகப் பணம் திருடப்படுகிறது.

இவ்வாறான மோசடிகள் தொடர்பில் அண்மைக்காலமாக அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.