2026 October 18, Sunday ⛅ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

வீட்டிற்குள் எரிபொருளைப் பதுக்கிய பெண் கைது!

உள்ளூர்March 29, 2026 · 7 months முன்9
வீட்டிற்குள் எரிபொருளைப் பதுக்கிய பெண் கைது!

சமகிபுர, ஊவா குடாஓய பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர் தனது வீட்டில் எரிபொருள் கையிருப்பினை மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த நிலையில் குடாஓய பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் வீட்டில் எரிபொருள் சேகரித்து மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக ஊவா குடாஓய பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த எரிபொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது 95 லீற்றர் பெற்றோல் மற்றும் 78 லீற்றர் டீசல் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் குறித்த பெண் இந்த எரிபொருட்களைச் சேகரித்து மறைத்து வைத்திருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட பெண் இன்று வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இச்சம்பவம் குறித்து குடாஓய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.