2026 October 19, Monday ⛅ கொழும்பு 29° 🌧️ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு QR முறைமை

உள்ளூர்March 28, 2026 · 7 months முன்5
கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு QR முறைமை

காலி, கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளி பிரிவில் (OPD) ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தை சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி நேரில் பார்வையிட்டார். 

மருந்து பெற்றுக்கொள்வதற்காக நோயாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எதிர்நோக்கும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக, ‘ஸ்மார்ட் டோக்கன்’ முறைமைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இலங்கையில் வைத்தியசாலை ஒன்றில் முதன்முறையாக இவ்வாறான திட்டம் கடந்த 25ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இந்த நடைமுறையினால் நோயாளர்களுக்கும் வைத்தியசாலை ஊழியர்களுக்கும் கிடைத்துள்ள வசதிகள் குறித்து பிரதி அமைச்சர் கேட்டறிந்ததுடன், இத்திட்டத்தை மேலும் முறைப்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகளையும் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.