2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் கடும் நெருக்கடியில் : சஜித்

உள்ளூர்March 25, 2026 · 5 months முன்3
சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் கடும் நெருக்கடியில் : சஜித்

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடிய போது , எரிபொருள் விலைகள் வேகமாக அதிகரித்து வருவதால், நாட்டின் பொருளாதாரத்திற்கு 52% பங்களிப்பை வழங்கும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், இந்த விலை உயர்வு உற்பத்திச் சங்கிலி மற்றும் வழங்கல்-தேவை கட்டமைப்பில் கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதன்படி,சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக ‘பராட்டே’ சட்டத்தை நீக்குமாறு அவர் அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளார்.

சுமார் 45 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை வழங்கும் இத்துறை வீழ்ச்சியடைந்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு, குடும்பப் பொருளாதாரம் சீர்குலைந்து, உற்பத்தித் திறன் பலவீனமடையும் என அவர் எச்சரித்தார்.

எனவே, தற்போதைய அரசாங்கம் இதில் தலையிட்டு அவர்களுக்குத் தேவையான பலத்தையும் ஆதரவையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.