2026 November 12, Thursday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

லங்கா ஐ.ஓ.சி, சினோபெக் எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

BREAKINGஉள்ளூர்March 22, 2026 · 8 months முன்11
லங்கா ஐ.ஓ.சி, சினோபெக் எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரித்ததைத் தொடர்ந்து, சினோபெக் (Sinopec) நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது. 

இதன்படி, சினோபெக் நிறுவனத்தின் ஒக்டேன் 95 பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 122 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 487 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலையை 219 ரூபாவினால் அதிகரிக்க அந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதன் புதிய விலை 572 ரூபாவாகும். 

இதேவேளை, லங்கா ஐ.ஓ.சி (LIOC) நிறுவனமும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகளுக்கு நிகராகத் தனது எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.