2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

வடகொரியாவில் கிம் ஜாங் உன் மீண்டும் அதிரடி வெற்றி

உலகம்March 18, 2026 · 5 months முன்3
வடகொரியாவில் கிம் ஜாங் உன் மீண்டும் அதிரடி வெற்றி

வடகொரியா நாடாளுமன்றத் தேர்தலில் 99.97% வாக்குகள் பெற்று அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் அபார வெற்றி பெற்றுள்ளார் .

வெறும் 0.07% எதிர்ப்புடன் அதிபர் கிம் ஜாங் உன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக யாரும் போட்டியிடாததால், வேட்பாளரின் பெயரை பேனாவால் அழித்து சிலர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

1957 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக எதிர்ப்பு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜூ ஆய், கிம் ஜாங் உன்னின் அரசியல் வாரிசாக உருவெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது . கடந்த சில நாட்களாகவே அவர் தனது தந்தையுடன் பல முக்கிய பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவது அவதானிக்கத்தக்கது.