2026 November 6, Friday ⛅ கொழும்பு 24° ☀️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கார்க் தீவில் அமெரிக்கா குண்டுவீச்சுத் தாக்குதல்

உலகம்March 14, 2026 · 8 months முன்6
கார்க் தீவில் அமெரிக்கா குண்டுவீச்சுத் தாக்குதல்

ஈரானின் பிரதான கச்சா எண்ணெய் ஏற்றுமதி முனையமாக கருதப்படும் கார்க் (Kharg) தீவு மீது அமெரிக்கா குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளது. 

கார்க் தீவிலுள்ள ஒவ்வொரு இராணுவ இலக்குகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. 

சுமார் 5 மைல் நீளம் கொண்ட இந்த சிறிய தீவு, ஈரான் கடற்கரையிலிருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது. 

கார்க் தீவு அந்நாட்டின் பிரதான கச்சா எண்ணெய் ஏற்றுமதி முனையமாகக் கருதப்படுவதுடன், இது ஈரானின் ‘பெட்ரோலிய உயிர்நாடி’ என்றும் அழைக்கப்படுகிறது. 

ஈரான் தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்தை இந்தத் தீவின் மூலமே முன்னெடுக்கின்றது.