2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

புதிய 10 தூதுவர்கள் : ஜனாதிபதி நியமனம்

உள்ளூர்March 12, 2026 · 5 months முன்3
புதிய 10 தூதுவர்கள் : ஜனாதிபதி நியமனம்

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் தலைவர்களாக நியமிப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அண்மையில் பெயரிடப்பட்ட 10 தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திரிகளின் நியமனங்களுக்கு உயர் பதவிகளுக்கான பாராளுமன்றக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

புதிய நியமனங்களைப் பெற்றவர்களின் விபரங்கள் பின்வருமாறு:

  • தர்ஷன எம். பெரேரா – மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

     

  • டி.எம்.எஸ்.பி. தஸநாயக்க – ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கைத் தூதுவர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

     

  • தயானி மெந்திஸ் – ஒஸ்ரியாவிற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

     

  • எஸ்.பி.டபிள்யூ. பத்திரண – ருமேனியாவிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

  • செல்வி என்.ஐ.டி. பரணவிதான – எத்தியோப்பியா மற்றும் ஆபிரிக்க ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

     

  • எஸ்.கே. சந்திரசிறி – இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

     

  • தம்மிக்க பெர்னாண்டோ – கென்யாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

     

  • அனுர விதானகே – லெபனானுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

     

  • பேராசிரியர் எம்.ஐ. பஸீஹா அஸ்மி – ஈரானுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்க உயர் பதவிகளுக்கான பாராளுமன்றக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

     

  • எம். பாரூக் எம். பௌசர் – பலஸ்தீனத்திற்கான இலங்கை பிரதிநிதியாக நியமிக்க உயர் பதவிகளுக்கான பாராளுமன்றக் குழு அனுமதி வழங்கியுள்ளது.