2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

யுக்ரைனில் ரஷ்யா நடத்திய போர்தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்திய காணொளி

உலகம்September 1, 2025 · 12 months முன்0
யுக்ரைனில் ரஷ்யா நடத்திய போர்தாக்குதல்  பரபரப்பை ஏற்படுத்திய காணொளி

உக்ரைனின் சிம்பெரோபோல் என்ற உளவுக்கப்பலை ரஷ்யா ட்ரோன் தாக்குதல் மூலம் அழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் பதிவாக காணொளியும் வெளியாகியுள்ள நிலையில் உக்ரைன் – ரஷ்ய போரில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் உக்ரைன் சிம்பெரோபோல்(Simferopol) உளவு கப்பல் கடலில் மூழ்கியதாக தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் நடவடிக்கையானது ஒடேசா பகுதியின் டான்யூப் நதி டெல்டாவில் மேற்கொள்ளப்பட்டதாகவும் ரஷ்ய அமைச்சகம் அறிவித்துள்ளது. சிம்பெரோபோல் கப்பல் தாக்கப்பட்டதை உக்ரைன் தரப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த லகுனா ரக கப்பல் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உக்ரைன் கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது.

வார் கோன்சோ டெலிகிராம் சேனலின் தகவல்படி, 2014ம் ஆண்டுக்கு பிறகு உக்ரைனால் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய கப்பல் சிம்பெரோபோல் என்பது குறிப்பிடத்தக்கது.